கோவைச் சூடி

கோவைச் சூடி


அகதியைப் பேணு

(1)

அகநகை தவிர்

(2)

அகந்தை  அடக்கு

(3)

அகப்பூ கொள்

(4)

அகமதி தவிர்

(5)

அகவிருள் போக்கு

(6)

அசதி நீக்கு

(7)

அச்சம் நீக்கு

(8)

அஞ்சனம் தவிர்

(9)

அஞ்சுபவன் கோழை

(10)

அடக்கி ஆளாதே

(11)

அடங்கிப் போகாதே

(12)

அடிசில் அளி

(13)

அடிமரம் பேணு

(14)

அடிமை ஆகாதே

(15)

அணங்கை எறி

(16)

அதிகாலை விழி

(17)

அமர்ந்து உண்

(18)

அரிதாரம் தவிர்

(19)

அருஞ்செயல் புரி

(20)

அலைமனம் போக்கு

(21)

அவப்புகழ் எய்தாதே

(22)

அளந்து பேசு

(23)

அளவொடு பேசு

(24)

அறமே பேசு

(25)

அறியாமை விலக்கு

(26)

அறிவுரை பேணு

(27)

அறிவைச் சேர்

(28)

அன்பாய்ப் பழகு

(29)

அன்பை ஊட்டு

(30)

அன்னம் இடு

(31)

அன்னியர் தஞ்சம்தவிர்

(32)

ஆசை கொள்

(33)

ஆணவம் நீக்கு

(34)

ஆண்மை போற்று

(35)

ஆதரவு கொடு

(36)

ஆராய்ந்து தஞ்சம்புகு

(37)

ஆரோக்கியம் பேணு

(38)

ஆளுமை கொள்

(39)

ஆற்றல் பெருக்கு

(40)

இல்லறம் பேணு

(41)

இழிசெயல் நீக்கு

(42)

இழிமொழி நீக்கு

(43)

இளஞ்சூடு சுகம்தரும்

(44)

இளநீர் பருகு

(45)

இளம்விருந்து பேணு

(46)

இறுமாப்பு தவிர்

(47)

இன்பம் பெருக்கு

(48)

இன்சொல் பேசு

(49)

ஈகை செய்

(50)

உணர்வு கொள்

(51)

உணவே மருந்து

(52)

உண்மையே பேசு

(53)

உயர்வாய் நினை

(54)

உயர்வைப் போற்று

(55)

உழைப்பை இகழாதே

(56)

உறவோடு வாழ்

(57)

உற்றவரை உதராதே

(58)

ஊழ்வினை உணர்

(59)

ஊளைசதை குறை

(60)

எதிர்நீச்சல் பழகு

(61)

எழுந்து பேசு

(62)

ஏதிலார்க்கு அருள்

(63)

ஏழைக்கு உதவு

(64)

ஏழ்மையில் நேர்மைகொள்

(65)

ஏறு தழுவு

(66)

ஐம்புலன் அடக்கு

(67)

ஒத்தல் பேணு

(68)

ஓதுவாரைப் பேணு

(69)

கடன் பற்றாதே

(70)

கமுக்கம் போற்று

(71)

கயவரைக் கழி

(72)

கருங்குணம் கொள்ளாதே

(73)

கலகம் செய்யாதே

(74)

கலக்கம் கொள்ளாதே

(75)

கலைமுகம் காட்டு

(76)

கல்விக்கழகு ஒழுக்கம்

(77)

கறை நீக்கு

(78)

கற்றதை மறவாதே

(79)

காதல் கொள்

(80)

காமத்தை விரட்டு

(81)

காலத்தே பயிர்செய்

(82)

காவல் சலியாதே

(83)

கீழ்மக்கள் சேராதே

(84)

குடிநலம் ஏத்து

(85)

குணமுடன் பழகு

(86)

குப்பை அழி

(87)

குரங்குமனம் அகற்று

(88)

குருவை இகழாதே

(89)

குறையற்ற உதவிசெய்

(90)

கூர்நோக்கு கொள்

(91)

கேடுபுகழ் எய்தாதே

(92)

கொச்சைச்சொல் தவிர்

(93)

கொடுந்தோற்றம் அழி

(94)

கொலுவில் உறங்கு

(95)

கோபத்தில் பொறுமைகொள்

(96)

கோபம் கொல்

(97)

கோள்சொல் தவிர்

(98)

கோவடி சேர்

(99)

சான்றோரெனத் திரியாதே

(100)

சிந்தை தெளி

(101)

சிறப்பையே பேசு

(102)

சிற்றினஞ் சேராதே

(103)

சினம் மற

(104)

சீரிலாரை நாடாதே

(105)

சுகமே சொர்க்கம்

(106)

சுத்தமே சுகம்

(107)

சுற்றம் இகழாதே

(108)

சூதாட்டம் மற

(109)

செந்நெறியில் நில்

(110)

செருக்குத் தவிர்

(111)

செழுந்தமிழ்ச் செய்

(112)

செந்தமிழ்ப் பேசு

(113)

செல்வத்திலும் எளிமைகொள்

(114)

சேமிக்கப் பழகு

(115)

சேராரைக் கழி

(116)

சொல்லாய்வு செய்

(117)

சொல்லேர் பூட்டு

(118)

சோம்பல் நீக்கு

(119)

சோர்வு தவிர்

(120)

ஞாயிற்றைப் போற்று

(121)

தமிழாய் இரு

(122)

தமிழனாய்ப் பழகு

(123)

தந்தையைப் போற்று

(124)

தர்மம் செய்

(125)

தற்புகழ்ச்சி விலக்கு

(126)

தற்பெருமை பேசாதே

(127)

தாயை வணங்கு

(128)

தானம் செய்

(129)

திங்களைப் போற்று

(130)

திருவடி துலங்கு

(131)

திறமை ஊட்டு

(132)

தீச்செயல் செய்யாதே

(133)

தீச்சொல் பேசாதே

(134)

தீப்பழி சுமத்தாதே

(135)

தீயன பேசாதே

(136)

தீயன்நட்பு விலகு

(137)

தீயோரை மதியாதே

(138)

துணிவு கொள்

(139)

துணையோடு சேர்

(140)

தும்மல் நல்லது

(141)

துயரம் மற

(142)

துறந்தாரைப் பேணு

(143)

துன்பத்தில் துணிவுகொள்

(144)

துன்பம் நீக்கு

(145)

தேறா நெஞ்சைச் சுடு

(146)

தொல்புகழில் வாழாதே

(147)

தோரணமாய் நிற்காதே

(148)

தோழமை கொள்

(149)

நகைத்தல் தவிர்

(150)

நடுவதே விளையும்

(151)

நடுவுநிலை எய்து

(152)

நடைபயிற்சி கொள்

(153)

நட்பு ஆராய்

(154)

நட்பை நாடு

(155)

நட்போடு இரு

(156)

நல்லேர் உழு

(157)

நல்லோரொடு பழகு

(158)

நற்சொல் கேள்

(159)

நற்சொல் பேசு

(140)

நாடுவது செய்

(161)

நீரளவே ஆம்பல்

(162)

நீர்க்கோர்வை நீக்கிவாழ்

(163)

நுகர்தமிழ் செய்

(164)

நூலளவே நுண்ணறிவு

(165)

நேர்பட வாழ்

(166)

நேர்மை கொள்

(167)

பகலவனை வணங்கு

(168)

பகிர்ந்து உண்

(169)

பகைமை கொள்ளாதே

(170)

பக்கம் பார்த்துப் பழகு

(171)

பக்கம் பார்த்துப் பேசு

(172)

பசிக்குப் பகை இல்லை

(173)

பண்பாய்ப் பேசு

(174)

பணிவு கொள்

(175)

பலருள் உறங்காதே

(176)

பழிச்சொல் பேசாதே

(177)

பழைமை நினை

(178)

பார்வையில் முதிர்ச்சி

(179)

பிணியைப் போக்கு

(180)

பிறப்பைப் போற்று

(181)

பிறரை இகழாதே

(182)

புண்சொல் தவிர்

(183)

புதைபொருள் நாடாதே

(184)

புரளி பேசாதே

(185)

புல்லோர்சொல் கேளாதீர்

(186)

புல்லோர் மேலோராகார்

(187)

பெரியோர்முன் நகையாதே

(188)

பெருந்தக்கார் சேர்

(189)

பெற்றோரைத் தொழு

(190)

பேதைமை கொள்ளாதே

(191)

பேய்க்காமம் அழி

(192)

பேரழுகை தீங்கு

(193)

பேராசை கொல்

(194)

பேரிடர் பண்ணாதே

(195)

பொய்மை தவிர்

(196)

பொருந்தச் செய்

(197)

பொருளீட்டி வாழ்

(198)

பொறாமை தவிர்

(199)

மகளிர் கடைவிழி தவிர்

(200)

மகனை வணங்காதே

(201)

மட்பாண்டத்தில் சமை

(202)

மரபு மாறாதே

(203)

மருந்துண்டு வாழாதே

(204)

மனச்சீர்மை கொள்

(205)

மனமலம் அகற்று

(206)

மனையாள் சொல்கேள்

(207)

மன்னர்வழி மாற்று

(208)

மாசறக் கல்

(209)

மாசிலா மனங்கொள்

(210)

மாதரைப் போற்று

(211)

மாமழை போற்று

(212)

மாயமனம் கிழி

(213)

மும்மலம் போக்கு

(214)

முரண்டு செய்யாதே

(215)

முரண் பேசாதே

(216)

மூத்தோரை வழிபடு

(217)

மூத்தோர்க்குச் சேவை செய்

(218)

மூத்தோர்சொல் போற்று

(219)

மேன்மக்களை ஏத்து

(220)

மொழிப்பற்று கொள்

(221)

யோகாசனம் பழகு

(222)

வஞ்சகம் தவிர்

(223)

வஞ்சகரைச் சேராதே

(224)

வம்பு பேசாதே

(225)

வயவுரை தவிர்

(226)

வரம்பு மீறாதே

(227)

வரலாற்றை அறி

(228)

வழக்கை எதிர்கொள்

(229)

வழிதல் தவிர்

(230)

வறியார்க்கு உதவு

(231)

வறுமையிலும் உதவு

(232)

வன்செயல் போக்கு

(233)

வன்சொல் தவிர்

(234)

வன்மம் மற

(235)

வாக்குத் தவறாதே

(236)

வாய்மை கொள்

(237)

விருந்துண்டு வாழ்

(238)

விருந்து பேணு

(239)

வீண்பழி போடாதே

(240)

வீண்பேச்சைத் தவிர்

(241)

வீராப்பு காட்டாதே

(242)

வீரியம் பேசாதே

(243)

வெகுளி கொல்

(244)

வெறுப்பை நீக்கு

(245)

வெறும்பேழையும் தாழிடு

(246)

வெற்றுரை தவிர்

(247)

வேகம் தவிர்

(248)

வைவாரை  வையாதே

(249)

வௌவுதல் தவிர்

(250)

கருத்துகள்